"புலி" டைட்டில் வேணாம் - விஜய் காட்டம்

விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படத்திற்கு 'புலி' என்ற டைட்டில் வைக்கப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ள நிலையில் இந்த டைட்டிலை மாற்றும்படி விஜய், இயக்குனர் சிம்புதேவனிடம் கூறியதாக தெரிகிறது.http://moviegalleri.net/wp-content/gallery/thuppaki-unseen-stills/thuppaki_unseen_stills_vijay_kajal_thuppaki_new_pics_2f23ada.jpg
கடைசி நேரத்தில் இந்த பெயரில் உள்ள இயக்கம் ஒன்றுக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என்று ஏதாவது ஒரு அமைப்பு எதிர்த்து குரல் கொடுக்க வாய்ப்பு உள்ளதால் இப்பொழுதே சுதாரித்து இந்த படத்தின் பெயரை மாற்றிவிடுவது என்ற முடிவில் இருக்கின்றாராம் இளையதளபதி.
தலைவா முதல் தனது ஒவ்வொரு படமும் ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்வதால் இந்த படத்தையாவது எவ்வித சிக்கலும் இன்றி ரிலீஸ் செய்யவேண்டும் என்று உறுதியான முடிவில் இருக்கும் இளையதளபதி, டைட்டிலை மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது
வரும் பொங்கல் தினத்திற்குள் புதிய பெயர் தேர்வு செய்யப்பட்டு அதனை அறிவிக்க விஜய் முடிவு செய்துள்ளார்.


0 comments:

Copyright © 2015 Newz Book